இன்று காலை 10.30 மணியளவில் மினி வான் – லொறி மோதி கொடூர விபத்துக்குள்ளாகி உள்ளது.
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற 750 ஆம் இலக்க மினிவானும், யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கிச் சென்ற லொறியுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 21 பேர் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment