யாழ்ப்பாணம் - கச்சேரி - நல்லூர் வீதியில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து,
யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸார் தெரிவித்தனர். புகையிரதம் வருவதை பொருட்படுத்தாமல் கச்சேரி - நல்லூர் வீதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த அனர்த்தத்தில் பொறியிலாளரான 41 வயதுடைய எஸ். சுதாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஆதவன் (வயது 28), அரவிந்தன் (வயது 28), கம்பதாஸன் (வயது 23) ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment