இன்றைய தினம் காலை புத்தூர்- ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயமடைந் துள்ளனர். எனினும் உயிரிழப்புக்கள் எவையும் இடம்பெறவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்றைய தினம் காலை 10.45 மணியளவில் பயணிகள் பேருந்தும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளாது. இந்நிலையில் பேருந்தில் சுமார் 40 பேர் பயணித்ததாகவும் சம்பவத்தில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ள நிலையில் 21 பேர் யாழ்.போதான வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும். சிலர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளுக்கு உயிர் இழப்புக்கள் எவையும் இல்லை என வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment