atharava add .jpg

Thursday, January 28, 2016

7 ‪#‎ஆவது‬ தடவையாகவும் ஆரம்பமாகிறது யாழ்.‪சர்வதேச_வர்த்தக_கண்காட்சி‬..

11:42 PM - No comments
7 ஆவது வருடமாக யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பமாகின்றது இக் கண்காட்சி 29,30,31 திகதிகளில் யாழ்.மாநகரசபை மைதானத்தில் முற்பகல் 10 தொடக்கம் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.
இக் கண்காட்சியில் நிர்மாணம் உபசரிப்பு உணவு மென்பானவகை, பொதியிடல், வாகனங்கள், தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம் ,நிதியியல் சேவைகள் ஆடைத்துறை விவசாயம் நுகர்வோர் உற்பத்திகள் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய 300 காட்சிக்கூடங்கள் இந்த கண்காட்சியில் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையான பொருட்கள் சந்தை விலையிலும் குறைவான விலைகளில் விற்பனை செய்யப்படவுள்ளன..

இதில் 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காண்காட்சி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் பளிஹக்கார, கௌரவ விருந்தினர்களாக இந்திய துணைத்தூதுவர் நடராஜன், யாழ்.அரச அதிபர் வேதநாயகன், மற்றும் யாழ்.மாநகர சபை ஆணையாளர் வாகீசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

பார்வையாளர்களிடமிருந்து நுழைவுக்கட்டணமாக 30 ரூபாய் அறவிடப்படும். அத்துடன் பாடசாலை மாணவர்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர்.பார்வையாளர்கள் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று நெருக்கடியைத் தவிர்க்கும் முகமாக முன்கூட்டியே
வருகை தந்து கண்காட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.





 


















வழிப்பறி; சந்தேகத்தில் ஒருவர் கைது

11:26 PM - No comments

வழிப்பறி, கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்; 21 வயதுடைய ஒருவரை நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வீதியில் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

 சந்தேக நபர் கைதுசெய்யப்படும்போது முகத்தை மூடிய வித்தியாசமான தலைக்கவசம் மற்றும் செய்மதித் தொழில்நுட்பத்தில் இயங்கும் அலைபேசி என்பவற்றை உடைமையில் வைத்திருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

9 மோட்டார் குண்டுகள் மீட்பு

11:25 PM - No comments
மீசாலை பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்திலிருந்து மீட்கப்பட்ட 9 மோட்டார் குண்டுகளும் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் வியாழக்கிழமை (28) செயலிழக்க செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். வாழைத் தோட்டத்தில் கிடங்கு வெட்டும் போது, மோட்டார் குண்டு ஒன்று இனங்காணப்பட்டு அது தொடர்பில் காணி உரிமையாளர் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார். அதனையடுத்து, விசேட அதிரடிப் படையினருடன் குறித்த இடத்துக்கு பொலிஸார் சென்று பார்த்த போது 9 மோட்டார் குண்டுகள் இருந்துள்ளன. அதனையடுத்து, அதனை மீட்டு செயலிழக்கச் செய்ததாக பொலிஸார் மேலும் கூறின 

சிறுப்பிட்டியில் ஆணின் சடலம் மீட்பு

11:22 PM - No comments
சிறுப்பிட்டி மத்தி நீர்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம், நேற்று வியாழக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த அப்பாக்குட்டி இராசதுரை (வயது 55) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள வீடொன்றில், சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு அப்பகுதி மக்களால் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த அச்சுவேலி பொலிஸார், குறித்த பகுதியினைச் சுற்றி குற்றப்பிரதேசமாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை, பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Monday, December 14, 2015

அரக்கன் பாடலின் முன்னோட்டம் (வீடியோ இணைப்பு)

8:23 AM - No comments
யாழ்ப்பாணத்தின் அரக்கர்களின் முதல் அடி (அரக்கன்) நிசாந்தனின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் , உமாகனின் திரைக்கதை மற்றும் பாடல் வரிகளில் பத்மயனின் தெறிக்கும் இசையில்…சிந்துஜன் | சயன் | மதி சுதா | சிந்தர் | வாகீசன் மற்றும் பலரின் நடிப்பிலும் கஜலக்சனின் தயாரிப்பில் வெற்றிவிநாயகன் வழங்கும் அரக்கன் வீடியோ பாடல் முன்னோட்டம் இதோ..



அரக்கன் பாடலின் டிரைலர்  (வீடியோ இணைப்பு)   ( கேலரிஇணைப்பு )









back to top